தி /மூ /அல் - ஹிலால் மத்திய கல்லூரி

தேசிய மீலாத்தின நிகழ்வு

whatsapp-image-2024-11-10-at-8.05.12-pm.jpeg
FB_IMG_1696700179168.jpg
FB_IMG_1696700179168.jpg
தேசிய மட்ட சாதனை

தேசிய மட்ட சாதனை

101வது சர்வதேச கூட்டுறவு தினப் போட்டியில் மாவட்ட ரீதியிலும், தேசிய ரீதியிலும் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் எமது பாடசாலையில் கணித உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் நிஹாஸ் முகம்மது ஸவ்மர் என்ற மாணவன் முதலாவது இடத்தையும் அதே போட்டியில் மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற

சித்திரப் போட்டியில் தரம் 11ல் கல்வி கற்கும் மூசீன் உஸ்மான் என்ற மாணவன் முதலாவது இடத்தையும் பெற்று எமது மாவட்டத்திற்கும் வலயத்திற்கும் , பாடசாலைக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.

 

தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டியில் இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் முகம்மது நிஹாஸ் முகம்மது ஸவ்மர் என்பவர் குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களை வழிநடாத்திய பாடசாலை அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் , ஆசிரியர்களான சுஜா ஆசிரியர் , முஜீப் ஆசிரியர், நபீஸ் ஆசிரியர் , பயாஸ் ஆசிரியர், லாபிர் ஆசிரியர், ஆசிரியைகளான ஹாதி ஆசிரியை, ஹன்சியா ஆசிரியை, றிப்னா ஆசிரியை ஆகியோருக்கும் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட பலநோக்கு கூட்டுறவு சங்க செயலாளர் திருமதி நடேஸ்வரி ஜெயராம் அவர்களுக்கும் பாடசாலையின் பழைய மாணவனான அப்ழல் என்பவருக்கும் பாடசாலை நிருவாகம் சார்பாகவும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தகவல்
அதிபர்
எஸ்.ஐ.சுஹுட்

 
 
 
 
 
தேசிய மட்ட ரீதியில் உஸ்மான் என்ற மாணவன்  சித்திர போட்டியில் 1ம் இடம் பெற்றார்.